தமிழகத்தில் போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டது ஏன்? ராஜ்மோகன்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்...
மாணவர்கள் அறவழியில் போராடினால் ஆதரிப்போம் என்று தமிழகத்தில் மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் தெரிவித்தார்.
தில்லியில் நீட் தேர்வு உள்ளிட்ட பல தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக சிஜேபி கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்திய மாணவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி விளக்கமளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்,
Advertisement
Advertisement
"மக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை, அமைதியான போராட்டத்தை ஆதரிப்போம்.
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரின் கைதை கடுமையாகக் கண்டிக்கிறோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அதையொட்டி தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டம் முறையாக அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. திடீரென தூண்டுதலால் போராட்டம் நடைபெற்றதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் முற்றிலும் நீட் ஒழிப்பு என்பதுதான் தவெகவின் நிலைப்பாடு.
மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆட்சியில் இல்லாதபோதும் சுமுக தீர்வை நோக்கித்தான் போராட்டம் நடத்தினோம். இதற்கு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவதுதான் தீர்வாக இருக்கும்" என்று கூறினார்.
Minister rajmohan explain on students arrest who protest against neet exam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.