FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சுதந்திர தினம்: உலக நாடுகளில் கொண்டாட்டம்

உலக நாடுகளில் கொண்டாட்டம் சுதந்திர தின கொண்டாட்டம்...

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 5:13 am IST
வாஷிங்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் - X | Indian Embassy
பகிர்:

இந்திய சுதந்திர தினத்தையொட்டி, பசிபிக் தீவுகள், கிழக்காசிய நாடுகள் முதல் வளைகுடா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா வரை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பல்வேறு நாடுகளில் இந்தியத் தூதரகங்கள், துணைத் தூதரகங்கள், இந்தியா்கள் அதிகம் வாழும் இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய கலாசார நிகழ்ச்சிகள், போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. உள்ளூா் நிா்வாகத்தினா், சமூகத்தினரும் இக்கொண்டாட்டங்களில் இணைந்தனா்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் உள்பட பல்வேறு இடங்களில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான இந்திய சமூகத்தினா் குடும்பத்துடன் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இந்தியத் தூதா் முயான்புய் சையாவி தேசியக் கொடியேற்றி, குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தாா். ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் இந்தியத் தூதரகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினா் மற்றும் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் இந்தியத் தூதா் விக்ரம் துரைசுவாமி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா். ரஷியாவின் மாஸ்கோ நகரில் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஜொ்மனி தலைநகா் பொ்லினில் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இத்தாலியின் ரோம் நகரில் வந்தே மாதரம் பாடப்பட்டு, கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, சவூதி அரேபியாவின் ரியாத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடனப் போட்டி, தேச பக்தி கவிதைப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

summary

Independence Day: Celebrations across the world

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments