FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளத்தில் அருணாசலைச் சேர்ந்த பொறியியல் மாணவர் சடலமாக கண்டெடுப்பு

கேரளத்தில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பற்றி....

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:26 pm IST
பலி... - கோப்புப்படம்.
பகிர்:

கேரளத்தில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

கேரள மாநிலம், கொச்சிக்கு அருகிலுள்ள கோதமங்கலத்தில் உள்ள பொறியியல் கல்லூரி படித்து வந்த அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், வாடகை வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இறந்தவர் அருணாசலத்தின் பாப்பும் பரே மாவட்டத்தில் உள்ள நஹர்லாகுனைச் சேர்ந்த மிச்சி மர்பு (20) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கோதமங்கலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

Advertisement

Advertisement

கோழிப்பள்ளியில் தனது கல்லூரி நண்பர்களுடன் தங்கியிருந்த வாடகை வீட்டில், மார்பு கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் தரைப்பகுதியில் சனிக்கிழமை கிடந்துள்ளார். உடனடியாக அவர் கோதமங்கலம் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மர்பு அறையின் கூரையிலிருந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றிருக்கலாம் என்றும், அப்போது கயிறு அறுந்ததால் தரைப்பகுதியில் விழுந்திருக்கலாம் என்றும் போலீஸ் சந்தேகிக்கிறது.

அவரது அறையிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதப்பட்ட 3 பக்க தற்கொலை குறிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி தரப்பிலிருந்து உடனடிப் பதில்கள் எதுவும் வரவில்லை. இறந்த மாணவரின் உறவினர்கள் கோதமங்கலம் வந்தடைந்த பிறகு கூராய்வு செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து கோதமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

An Arunachal Pradesh native studying at an engineering college in Kothamangalam near here has been found dead in the room of a rented house, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments