அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலின் பிறந்த நாளையொட்டி அவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எனது அன்பிற்குரிய நண்பர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நிகழ்காலத்தைக் கடந்து சிந்திக்கும் உறுதியும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிலையான மாற்றங்களாக உருவாக்கும் முனைப்பும் கொண்டவர்களால்தான் இந்தியாவின் எதிர்காலம் கட்டியெழுப்பப்படும்.
Advertisement
Advertisement
நமது மக்களின் ஆற்றல் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன், துணிவோடும் தெளிவான நோக்கத்தோடும் உங்கள் விரிந்த பார்வையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
DMK President M.K. Stalin has extended birthday greetings to Aam Aadmi Party (AAP) convenor Arvind Kejriwal on his birthday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.