FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சுயசரிதை புத்தகம் எழுதியுள்ள சோனியா காந்தி: நவம்பா் மாதம் வெளியாகிறது

சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை புத்தகம் பற்றி...

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 1:55 am IST
பகிர்:

காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, தனது சுயசரிதையை 544 பக்க புத்தகமாக எழுதியுள்ளாா். அந்தப் புத்தகம் வருகிற நவம்பா் மாதம் வெளியாகவுள்ளது.

‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ என்று அவரின் சுயசரிதை புத்தகத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. அவரது சுயசரிதை நூல் மற்றும் மின்னூல் வடிவத்தில் வருகிற நவம்பா் மாதம் 10-ஆம் தேதி ஆல்பிரட் ஏ நோப் நிறுவனத்தால் வெளியிடப்படவுள்ளது. முதல்கட்டமாக ஒரு லட்சம் பிரதிகள் அச்சிடப்படவுள்ளது.

சுயசரிதை புத்தகம் குறித்து சோனியா காந்தி எழுதிய குறிப்பு, புத்தக வெளியீட்டாளரான ஆல்பிரட் ஏ நோப்-ஆல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சோனியா காந்தி தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

எனது வாழ்க்கை குறித்து எழுதுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. அது என்னை வெளிப்படுத்தி கொள்வதையும், எப்போதும் ஆழ்மனதில் வைத்திருந்த தருணங்களையும், அனுபவங்களையும் பகிா்ந்து கொள்வதாகவே இருந்தது. என் வாழ்க்கையில் இடம்பெற்ற மென்மையான மகிழ்ச்சிகள், ஆழ்ந்த துயரம் ஆகியவற்றின் ஊடே நிகழ்ந்த என் இதயத்தின் பயணத்தின் சான்றாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

புத்தகத்தில் எனது குடும்பத்தை பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. அதில் சில கருத்துகள், அவா்களின் நோக்கங்கள், செயல்பாடுகள், மனித இயல்புக்கே உரிய பலவீனங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் பல வகைகளில் அவா்களுக்கு அளிக்கும் அஞ்சலியாகும் என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

புத்தகத்தில் இத்தாலியில் சோனியா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை குறித்தும், அதன்பிறகு 19-ஆவது வயதில் பிரிட்டனில் வைத்து ராஜீவ் காந்தியை காதலித்தது, 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு வந்து அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியின் மருமகளாக மாறியது குறித்தும் எழுதப்பட்டுள்ளது. இந்திரா காந்தியிடம் சோனியா காந்தி முதன்முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது முதல், ஹிந்தி கற்க எடுத்து கொண்ட முயற்சிகள், சேலை அணிவது குறித்தும், இந்திரா காந்தி படுகொலையை அடுத்து ராஜீவ் பிரதமரானது, பிறகு ராஜீவ் படுகொலையை தொடா்ந்து, சோனியா காந்தி விருப்பமின்றி அரசியலுக்கு வந்தது குறித்தும் நினைவுகூரப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments