ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம்: நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!
ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம் வெளியிடுவது பற்றி..
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் சுயசரிதை புத்தகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 12) வெளியிடவுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் 2017 - 2022 வரை பதவி வகித்தார். இந்தியாவின் மிகச் சிறந்த பொது ஆளுமைகளில் ஒருவரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் இந்தச் சுயசரிதை வெளியீட்டு நிகழ்வு அமையும்.
Advertisement
Advertisement
ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கைப் பயணம், அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு, பொது வாழ்க்கை, இந்தியாவின் குடியரசுத் தலைவராக அவர் ஆற்றிய பணி அனுபவங்கள், போராட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை விவரிக்கும் வகையில் சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்திற்கு "இந்தியக் குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம் நாளை தில்லியில் பிரதமர் மோடி இந்த புத்தகத்தை வெளியிடுகிறார். நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ராத்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை அவரது முன்னிலையில் வெளியிடுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Prime Minister Narendra Modi will release the autobiography of former President Ram Nath Kovind, "Triumph of the Indian Republic: My Life, My Struggles", here on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.