FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டது பற்றி...

பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடிப்பு - PTI
பகிர்:

தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை மத்திய அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர்.

சில நாள்களுக்கு முன்னதாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகளையும், வாகன நிறுத்துமிடக் கம்பங்களையும் பாகிஸ்தான் அகற்றியது.

இந்த நிலையில், புதுதில்லியில் உள்ள சாணக்யபுரி பகுதியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதகரத்துக்கு ஒதுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, பாதையை ஆக்கிரமித்து கட்டமைப்புகள் கட்டப்பட்டதாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பாகிஸ்தான் தூதரகம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த போக்குவரத்துத் தடுப்புகள் மற்றும் தடுப்பு வேலிகளையும் இந்திய அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர்.

விசா பிரிவுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்புகளையும் ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி இன்று காலை அகற்றினர்.

முன்னதாக, ஸ்ரீநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், “காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி” எனக் கருத்து தெரிவித்ததுடன், அப்பகுதியில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

summary

Central Government demolishes encroachments by the Pakistan High Commission in Delhi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments