ஒருநாள் பாகிஸ்தான், ஆப்கன், வங்கதேசம் இந்தியாவுடன் இணையும்! ஆரூடம் சொல்லியிருப்பது யார்?
ஒருநாள் பாகிஸ்தான், ஆப்கன், வங்கதேசம் இந்தியாவுடன் இணையும் என்று பாபா ராம்தேவ் கூறியிருப்பது பற்றி..
ஒருநாள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகியவை இந்தியாவுடன் இணையும், அதுவரை மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று யோகா குரு என்று அழைக்கப்படும் பாபா ராம்தேவ் கூறியிருக்கிறார்.
சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், நாட்டில் இந்து மதத்துக்கோ இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதத்துக்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படாது, ஆனால் நம் நாட்டின் கௌரவமும் கண்ணியமும் தான் கேள்விக்குறியாகின்றன என்று கூறியிருக்கும் பாபா ராம்தேவ், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் நிலை குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருந்தார்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இந்துக்கள் கொடுமைகளையும் அநீதிகளையும் எதிர்கொண்டுள்ளதாகவும் ராம்தேவ் குற்றம் சாட்டினார்.
Advertisement
Advertisement
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்தியாவுடன் மீண்டும் இணையும் நாளும் வரும். அதுவரை மக்கள்தான் சற்று பொறுமை காக்க வேண்டும் என்று ராம்தேவ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே, இந்திய பொருளாதாரம் மிகச் சிறந்த பொருளாதாரமாக மாறுவதை பார்க்க விரும்புகிறேன். இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வேண்டும், இந்திய பாஸ்போர்ட் மதிப்பு மிக்கதாக மாற வேண்டும், உலகின் எந்த நாட்டுக்கும் செல்ல இந்தியர்கள் விசா கோரும் நிலையே இருக்கக் கூடாது என்றும் யோகா குரு கூறியிருக்கிறார்.
One day, Pakistan, Afghanistan, and Bangladesh will unite with India! Who made this prediction?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.