FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆடவர் பாகிஸ்தான்!

ஆசிய விளையாட்டு ஆடவருக்கான கிரிக்கெட்டில் அரையிறுதியில் வென்ற பாகிஸ்தான் அணி குறித்து...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் - படம்: ஏசியன் கிரிக்கெட் கவுன்சில்
பகிர்:

ஆசிய விளையாட்டு ஆடவருக்கான கிரிக்கெட்டில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மற்றுமொரு அரையிறுதியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடி வருகின்றன. இதில் வெல்லும் அணி பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் விளையாடவிருக்கிறது.

முதல் அரையிறுதியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை மேற்கொண்டது. மழையின் காரணமாக டி20 போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 13 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹிரிதாய் 25 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார்.

பாகிஸ்தான் சார்பில் சுஃப்யான் மோகிம் 3, அரஃபாத் மின்ஹாஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 11.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த அணியில் அதிகப்பட்சமாக அப்துல் சமாத் 30, ஹாசன் நவாஸ் 27, சைம் ஆயுப் 21 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்கள். இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி தங்கம் வெல்லும் முனைப்புடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

summary

Pakistan vs Bangladesh, 1st Semi-Final, Asian Games 2026 Pakistan won by 6 wkts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments