1984 தில்லி கலவர வழக்கில் சிறையிலிருந்த காங். முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் காலமானார்!
தில்லி கலவர வழக்கில் சிறையிலிருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் வியாழக்கிழமை காலமானதைப் பற்றி...
தில்லி கலவர வழக்கில் சிறையிலிருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 80.
1984 ஆம் ஆண்டு தலைநகர் தில்லியில் நடைபெற்ற கலவர வழக்குகளுக்காக தில்லியின் திஹார் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த சஜ்ஜன் குமார், சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டுவரும் போதே இறந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணத்திற்கான காரணத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரதமருமான இந்திரா காந்தி, சீக்கிய மதத்தைச் சேர்ந்த பாதுகாவலர்களால் கடந்த 1984-ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால், சீக்கிய மதத்தினருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
சீக்கியர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குருத்வாராக்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்றன. தில்லி கலவரத்தில் கிட்டத்தட்ட 3,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சரஸ்வதி விஹார் பகுதியில், 1984 ஆம் ஆண்டு நவ. 1 ஆம் தேதி ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். அவர்களின் வீட்டில் இருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஜஸ்வந்த் சிங்கின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், பஞ்சாபி பாக் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது. பின்னர், சிறப்பு புலனாய்வுக் குழு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது.
சஜ்ஜன் குமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லி கலவர வழக்கில் சிக்காமல் இருந்து வந்தார். 2018 ஆம் ஆண்டு பாஜக அரசு, தில்லி கலவர வழக்கை தூசித்தட்டிய நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்வாக்கு மிக்க ஜாட் சமூகத்தின் தலைவரான அவருக்கு 2018 டிச. 17-ஆம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது.
1977-ஆம் ஆண்டில் ஒரு கவுன்சிலராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சஜ்ஜன் குமார், அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டுமுதல் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Former Congress MP Sajjan Kumar, who was convicted for his role in the 1984 anti-Sikh riots case, died on Thursday at 80. Kumar, who was serving a life sentence in Delhi's Tihar Jail in riot-related cases, was declared brought dead at Safdarjung Hospital. The hospital has not yet clarified the reason behind his death.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.