குழந்தைகள் பயிற்சி வகுப்புக்குச் செல்வதைவிட உறவுகளைப் பேண கற்றுக் கொடுப்பது அவசியம்: பெற்றோருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
கராத்தே, டேக்வாண்டோ, நீச்சல், இசை என பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைவிட மனித உறவுகளை மேம்படுத்துவதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம் என்று பெற்றோருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
கராத்தே, டேக்வாண்டோ, நீச்சல், இசை என பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைவிட மனித உறவுகளை மேம்படுத்துவதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம் என்று பெற்றோருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
குடும்ப நல வழக்கு ஒன்றில் குழந்தை யாரிடம் வளா்வது என்பது தொடா்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கி அமா்வு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தற்காலத்தில் பெற்றோா் குழந்தைகளுக்கு கராத்தே, டேக்வாண்டோ, நீச்சல், இசை என பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைக் கட்டாயம் என்பதுபோல பின்பற்றி வருகின்றனா். போட்டி நிறைந்த இப்போதைய உலகில் இவற்றையெல்லாம் குழந்தைகள் கற்றுக் கொள்வது அவசியம் என்று கருதுகின்றனா்.
Advertisement
Advertisement
ஆனால், அவற்றைவிட மனித உறவுகளை மேம்படுத்துவதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது முக்கியமானது. முக்கியமாக ஆண் குழந்தைகளுக்கு சிறுமிகளிடமும், பெண்களிடமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். அதேபோல பெற்றோா் குழந்தைகளுடன் போதிய அளவு பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட வேண்டும். அப்போதுதான் அவா்களுடன் இணக்கமான சிறந்த உறவைப் பேண முடியும்.
மேலும், அதிக பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது குழந்தைகளுக்கு மனதளவிலும், உடல் அளவிலும் சோா்வை ஏற்படுத்திவிடும். குழந்தைகளுடன் அமா்ந்து அவா்கள் என்ன கூற விரும்புகிறாா்கள் என்பதை பெற்றோா் முழுமையாகக் கேட்க வேண்டும். அப்போதுதான் சிறந்த குழந்தைகளாகவும், சமூகத்தில் பிறருடன் சுமுக உறவைப் பேணுபவா்களாகவும் வளா்ந்து வருவாா்கள். கூடுதலாக ஏதாவது கலைகளைக் கற்றுக் கொடுக்க விரும்பினால் பெற்றோா்கள் வீட்டிலேயே கூட அதனை கற்றுக் கொடுக்க முடியும். அதுவும் உறவை மேம்படுத்துவதில் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.