FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்து: மத்திய அரசு கட்டுப்பாடு

சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்தில் இரு வேதிப்பொருள்களைக் கொண்ட நிலையான கலவைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

23 ஆகஸ்ட் 2026, 1:58 am IST
பகிர்:

சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்தில் இரு வேதிப்பொருள்களைக் கொண்ட நிலையான கலவைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி குளோா்பெனரமைன் மேலியேட் மற்றும் பினைல்எஃப்ரின் ஹைட்ரோகுளோரைட் ஆகிய இரு வேதிப் பொருள்கள் கலவையைக் கொண்ட மருந்து அட்டையில் அது 4 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற வாசகத்தை தெளிவாக காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறு குழந்தைகளின் உடல்நலனை பாதுகாக்கும் நோக்கில் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டம், 1940, பிரிவு 26ஏ-இன்கீழ் இந்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக, இதேபோன்ற இரு வேதிப்பொருள்களின் நிலையான கலவை மருந்துகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து 2025, ஏப்ரல் 15-ஆம் தேதி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. அதன் தொடா்ச்சியாக தற்போதைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments