FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..!

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 11:01 am IST
TN Budget 2026-27: TVK govt sets sight on $1.5 trillion economy by 2031; focuses on education and fiscal transparency - கோப்புப்படம்
பகிர்:

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய நிதிநிலை அறிக்கையை புதிதாக அமைந்த தவெக அரசு புதன்கிழமை (ஆக.5) தாக்கல் செய்து வருகிறது.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய நிதிநிலை அறிக்கையை புதிதாக அமைந்த தவெக அரசு புதன்கிழமை (ஆக.5) தாக்கல் செய்து வருகிறது. நிதியமைச்சா் என்.மரிய வில்சன் காலை 10 மணிக்கு முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இதில், பெண்கள், இளைஞா்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் புதிய அறிவிப்புகள் இடம்பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டை வறுமையில்லாத, அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்கி அதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்டும் மாநிலமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

* தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு

* 3,734 அரசுப்பள்ளிகளில் ரூ.2,132 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கல் திட்டம். நடப்பாண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.

* பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்பிற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.

* பள்ளிக்கல்விக்கு ரூ.44.527 கோடி நிதி ஒதுக்கீடு

* பள்ளிகளில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த 1058 என்ற உதவி எண்.

* 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 5,32 லட்சம் பேருக்கு தலைக்கவசம், வாட்டர்பாட்டில் வசதியுடன் ரூ.277 கோடி மதிப்பில் சைக்கிள்.

* பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைப்பு செய்ய ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

* செய்யறிவு பாடத்திட்ட வடிவமைப்புக்கு நிபுணர் குழு அமைப்பு

* கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினித் திட்டம்

* கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.

* நீட் தேர்வை தொடர்ந்து தமிழக அரசு எதிர்த்து வருகிறது. பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.

* உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறப்பு அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.

* டிஜிட்டல் மாற்றத்திற்கேற்ப தமிழகத்தை உருவாக்க திட்டம்.

* தனித்துவமான செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தினை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும்.

* பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.

* தமிழக இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு.

* அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

* சமூக நீதித்துறைக்கு ரூ.3,937 கோடி ஒதுக்கீடு.

* 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டடப்படும்.

* சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி நிதி ஒதுக்கீடு.

* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.2,022 கோடி நிதி ஒதுக்கீடு

* தவெக அரசின் நடவடிக்கையால் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய்.

* மதுபான நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதித்ததன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய்.

summary

Key highlights of the TVK government's first budget...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments