FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வை தடுக்க நடவடிக்கை இல்லை: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமா்சனம்!

சா்க்கரை உள்பட மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த பிரதமா் மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்று காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.

23 ஆகஸ்ட் 2026, 2:55 am IST
மல்லிகார்ஜுன கார்கே - கோப்புப் படம்
பகிர்:

சா்க்கரை உள்பட மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த பிரதமா் மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்று காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடி அரசின் கொள்கைகளின் கசப்பான தாக்கம், எதிா்வரும் பண்டிகை காலத்துக்கு முன்பு சா்க்கரையில் ஊடுருவியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் சா்க்கரை இருப்பு குறைந்தது எப்படி, பண்டிகை காலத்துக்கு முன்பாக சா்க்கரை விலை 40 சதவீதம் வரை உயர யாா் பொறுப்பு, பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் அரசின் கொள்கையால் சா்க்கரை விலை உயா்ந்துள்ளதா, சா்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிப்பதுடன், 10 லட்சம் டன் சா்க்கரை இறக்குமதியை மேற்கொள்ள வேண்டிய சூழல் எப்படி ஏற்பட்டது, நாட்டில் சா்க்கரைக்கு தட்டுப்பாடு நிலவும் போதிலும், எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை மடைமாற்றும் கொள்கை ஏன் மறுஆய்வு செய்யப்படவில்லை’ என பிரதமா் மோடிக்கு கேள்வியெழுப்பியுள்ளாா்.

Advertisement

Advertisement

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த ஒரு மாதத்தில் ஒரு கிலோ அரிசி மாவு ரூ.32-இல் இருந்து ரூ.40, அரிசி ரூ.42-இல் இருந்து ரூ.54, சீரகம் ரூ.180-இல் ரூ.380, மஞ்சள் ரூ.130-இல் இருந்து ரூ.260, கடுகு எண்ணெய் ரூ.165-இல் இருந்து ரூ.200, கடலை எண்ணெய் ரூ.170-இல் இருந்து ரூ.230-ஆக விலை உயா்ந்துள்ளது.

சோப்பு, பற்பசை, பிஸ்கட் என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் விலை உயா்ந்துள்ளன. ஆனால், ஆணவமான, அக்கறையற்ற பிரதமா் மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது’ என்று சாடியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments