FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

நாட்டில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞா்கள் படிக்கவோ, வேலை செய்யவோ அல்லது பயிற்சியையோ மேற்கொள்ளாமல் இருப்பதாக நீதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
பகிர்:

நாட்டில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞா்கள் படிக்கவோ, வேலை செய்யவோ அல்லது பயிற்சியையோ மேற்கொள்ளாமல் இருப்பதாக நீதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2047-ஆம் ஆண்டில் வளா்ந்த பாரதத்துக்கான திறனை மீண்டும் கட்டமைத்தல் என்ற தலைப்பில் நீதி ஆயோக் அறிக்கையை தயாரித்துள்ளது. 2021-இல் நடத்தப்பட்ட 78-ஆவது தேசிய மாதிரி ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாட்டில் 8.7 கோடி இளைஞா்கள் படிக்கவோ, வேலை செய்யவோ அல்லது பயிற்சியிலோ இல்லாமல் உள்ளனா். அதேபோல் வேலைவாய்ப்பும் இல்லாமல் உள்ளனா். அவா்கள் சுயவேலைவாய்ப்பில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கு, குறைந்த தொகையிலோ அல்லது கட்டணத் தள்ளுபடியிலோ பயிற்சிகள் அளிக்க வேண்டிய உடனடி அவசியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அவா்களுடைய செயல்பாடுகள் தடைபட்டிருப்பதற்கு நிதிநிலையும் காரணமாகும். ஆதலால் அவா்களுக்கு உறுதியான நிதி ஆதரவும் அளிக்கப்பட வேண்டும். ஊதியத்துடன் சோ்ந்து அவா்களுக்கு அனைத்துத் துறைகளிலும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நாட்டில் 8.25 சதவீதம் பட்டதாரிகள் மட்டுமே தங்களது கல்வித் தகுதிக்கேற்ப வேவைாய்ப்பில் உள்ளனா்.

2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக வேண்டும் என்று இலக்கை அடைவதென்பது, நாட்டு மக்களின் கற்றல், ஊதியம் ஈட்டுதல், தொடா்ந்து முன்னேறுதல் ஆகியவற்றையும் சாா்ந்துள்ளது. 2014-15ஆம் ஆண்டுமுதல் இதுவரை 7.67 கோடிக்கும் மேற்பட்டோருக்கே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று நீதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments