ஐஃபோனுக்கு மாதத் தவணை கட்டச் சொன்ன மகன்! குடும்பமே பலியானதன் பின்னணி
ஐஃபோனுக்கு மாதத் தவணை கட்டச் சொன்ன மகன் மீது பெற்றோர் கோபப்பட்டதால் குடும்பமே பலியான சம்பவத்தின் பின்னணி
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள டிஸ்கோன் மலைப் பகுதியிலிருந்து, மகன் மற்றும் அவரது பெற்றோர் பலியான சம்பவத்தின் பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
18 வயது இளைஞர் குணால், பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு ஐஃபோனை வாங்கிவிட்டு, அதற்கான மாதத் தவணையை பெற்றோரைக் கட்டுமாறு வற்புறுத்தியிருக்கிறார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் அதிருப்தி அடைந்த குணால், காலை 10 மணிக்கு மலையின் உச்சிக்கு வந்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். அவரைத் தடுக்க பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் முயன்றனர்.
Advertisement
Advertisement
சுமார் மூன்று மணி நேரம் கெஞ்சியிருக்கிறார்கள். மலை உச்சிக்கு சென்று மகனை மீட்க முயன்ற போது, அவரது தந்தை முரளிதரனும் மகனும் நிலைத்தடுமாறி மலையிலிருந்து விழுந்து பலியானார்கள். இதனைப் பார்த்த அந்த இளைஞரின் மகன் சங்கீதா, தான் நின்றிருந்த இடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். ஒரே இடத்தில் ஒரு குடும்பமே மரணமடைந்துவிட்டது.
காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது.
அந்த விடியோவில், ஏராளமானோர், இளைஞரை சமாதானப்படுத்த முயல்கிறார்கள. ஆனால், அவர் நான் இறப்பது ஒன்றே தீர்வு என்று கூறிக்கொண்டிருந்தார். ஒரு ஐஃபோன் குடும்பத்தையே அழித்துவிட்டதே என அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.