FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வு குறித்த குற்றச்சாட்டுகள் தவறானவை: மத்திய அரசு மறுப்பு

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக வெளியாகும் குற்றச்சாட்டுகள் தவறானவை அரசு மறுத்துள்ளது குறித்து...

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வு குறித்த குற்றச்சாட்டுகள் தவறானவை - கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக சமூக ஊடகங்களில் வெளியாகும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தனது சமூக வலைதள பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளதாவது:

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக சமூக ஊடகங்களில் வெளியாகும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் புனையப்பட்ட மற்றும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு நம்பகமான ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இவை பொறுப்பான ஊடகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஊடக நெறிமுறைகளுக்கு உள்பட்டவை அல்ல என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான ஸ்கிரீனிங்க் தேர்வு வெளிப்படையான முறையில் சரியான முறையில் நடத்தப்பட்டது. தேர்வில் எந்தவித முறைகேடுகளோ, கசிவுகளோ நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் சரியான நேரத்தில் வெளியிடப்படும்.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையற்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

summary

The Government has termed the claims made in the news report as misleading and completely unsubstantiated regarding Foreign Medical Graduate Examination.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments