FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 29 ஜூலை 2026, 3:38 pm IST
மக்களவை - SANSAD
பகிர்:

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட ‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ மீதான விவாதம் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.

இன்றும் விவாதம் தொடர்ந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவை உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று நிறைவேற்றப்பட்டதும், மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீது நேற்று பகல் தொடங்கிய விவாதம் இரவு 11 மணி வரை நீடித்தது. இதில், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பங்கேற்று காரசார விவாதத்தை முன் வைத்திருந்தார்.

இன்று ராகுல் காந்தி விவாதத்தில் பங்கேற்றுப் பேசியிருந்தார். இறுதியாக, மக்களவை உறுப்பினர்களிடையே குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தோ்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ. 50 லட்சம் வரை அபராதமும், முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

summary

preventing examination malpractices bill passed in Lok Sabha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments