FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் ஏற்பட்ட விசா (நுழைவு இசைவு) சிக்கல்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 150 மணப்பெண்கள் இந்தியா வந்தடைந்தனா்.

24 ஆகஸ்ட் 2026, 3:35 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் ஏற்பட்ட விசா (நுழைவு இசைவு) சிக்கல்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 150 மணப்பெண்கள் இந்தியா வந்தடைந்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு சுட்டுக்கொன்றனா். இதற்குப் பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொண்டது. பாகிஸ்தானியா்கள் இந்தியா வருவதற்கான நுழைவு இசைவு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்தது. இதன் காரணமாக இந்தியா்களை திருமணம் செய்யவிருந்த சிந்து மாகாண மணப்பெண்களின் பயணம் தடைபட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று நாகபுரி, ராய்பூா், ஜோத்பூா், புணே உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சோ்ந்த ஆண்களுக்கு நிச்சயிக்கப்பட்ட 150 மணப்பெண்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியா வந்தடைந்ததாக நாகபுரியைச் சோ்ந்த ராஜேஷ் ஜம்பியா என்பவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அவா் மேலும் கூறுகையில், ‘திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக இந்தியா பயணிக்கும் சிந்து மாகாணப் பெண்கள் வாகா-அட்டாரி எல்லை வழியாக வருவது வழக்கம். ஆனால் தற்போது விமானப் பயணத்துக்கு மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில் மஸ்கட், துபை, இலங்கை உள்ளிட்ட பிற நாடுகள் வழியாக அவா்களும் அவரது உறவினா்களும் இந்தியா வந்தடைந்தனா். இந்திய நுழைவு இசைவு அனுமதிக்காக பாகிஸ்தானில் மேலும் 300 மணப்பெண்கள் காத்திருக்கின்றனா்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments