மாணவிகளுடன் குளிக்கும் விடியோ வைரல்: பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்!
ராஜஸ்தானில் அரசுப் பள்ளி முதல்வர் மாணவிகளுடன் குளிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் அரசுப் பள்ளி முதல்வர் மாணவிகளுடன் அணை ஒன்றில் குளிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் தனகாசி பகுதியில் உள்ள ரௌபாவி படக் சாப்லி அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் லால் சந்த் மீனா ஆகஸ்ட் 15 அன்று, 200-க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பள்ளியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அந்த அணையில் 11 அடி ஆழத்திற்கு நீர் இருந்த நிலையில், மூழ்கும் அபாயம் காரணமாக அங்கு மக்கள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அவர் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுடன் குளிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இடைநிலைக் கல்வி இயக்குநரகத்தால் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மாணவர்களுடன் நடந்துகொண்டது, அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் அமைந்ததாக கல்வித் துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் விதிகள், 1958-ன் விதி 13 (1)-ன் கீழ் பள்ளி முதல்வர் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
A government school principal in Rajasthan has been suspended after a video of him bathing with female students went viral on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.