கோதாவரியில் குதித்து குடும்பமே தற்கொலை: துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர் கைது
கோதாவரியில் குதித்து பொறியாளர், மனைவி, மகள் தற்கொலை செய்த சம்பவத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில், பொறியாளர், அவரது மனைவி மற்றும் மகள் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர் கைது செய்யப்படுள்ளார்.
பஞ்சாயத் ராஜ் துறையின் உதவி பொறியாளராக இருக்கும் தில்லபுடி நூகராஜூ, அவரது மனைவி மீனா, மகள் சௌஜன்யா ஆகியோர், சாலை மற்றும் ரயில் பாலத்திலிருந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்களுடன் 10 வயது பேரனும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டார்.
நூகராஜூ எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தில், ஷேக் சாதிக் கான் என்ற துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர்தான் இவர்களது தற்கொலைக்குக் காரணம் என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்தவர் பல மாநிலங்களில் தேடுதல் பணி நடைபெற்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.