FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓணம் மது விற்பனை அமோகம்! 8 நாளில் ரூ. 771 கோடி!

கேரளத்தில் ஓணம் பண்டிகை மது விற்பனை பற்றி..

27 வினாடிகள் முன்பு
மது விற்பனை - file photo
பகிர்:

கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி கடந்த 8 நாள்களில் ரூ. 771.29 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

10 நாள்கள் நடைபெறும் ஓணம் பண்டிகையானது, ஒவ்வொரு ஆண்டும் கேரளத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெறும். மதுப் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்த மதுபானங்களை அருந்தியும், நண்பர்களுக்கு விருந்தளித்தும் மகிழ்வார்கள். இந்த நிலையில் பத்து நாள் கொண்டாட்டத்தின் ஆக. 25 வரையிலான எட்டு நாள்களில் ரூ.771.29 கோடி மது விற்பனையாகியுள்ளது.

இதற்கு முந்தை ஆண்டு ஓணம் பண்டிகை காலத்தின் இதே காலகட்டத்தில் ரூ. 694.96 கோடி மதிப்பிலான மது விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு ரூ.76 கோடி அதிகம் விற்பனையாகியுள்ளது.

Advertisement

Advertisement

திருவோணத்திற்கு முந்தைய நாளான உத்திராடம் அன்று (ஆகஸ்ட் 25) பெவ்கோ விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 126.31 கோடி மதிப்பிலான மது விற்கப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டு ரூ. 137.64 கோடி விற்பனையுடன் ஒப்பிடுகையில் குறைவு என்று அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை காலத்தில் பெவ்கோ ரூ. 826.38 கோடி மதிப்பிலான மது விற்பனையைப் பதிவு செய்திருந்தது. இந்த ஆண்டு விற்பனை அந்த அளவைத் தாண்டும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

பெவ்கோ என்பது கேரள மாநிலத்தில் முழு உரிமை பெற்ற நிறுவனமாகும். இதன் தயாரிப்பு வரிசையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் (IMFL), பீர், வைன், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் (FMFL) மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட வைன் (FMW)ஆகியவை அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments