தில்லியில் தீப்பிடித்த கட்டடத்துக்குள் சிக்கிய 4 போ் பத்திரமாக மீட்பு
தில்லி பால்ஜீத் நகரில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்றாவது தளத்தில் சிக்கிய 4 பேரை காவல் துறையினா் பத்திரமாக மீட்டனா்.
தில்லி பால்ஜீத் நகரில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்றாவது தளத்தில் சிக்கிய 4 பேரை காவல் துறையினா் பத்திரமாக மீட்டனா்.
படேல் நகா் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை தீ விபத்து குறித்து தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடா்ந்து, ஹில் மாா்க் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட வீட்டுக்கு காவல் துறையினா் விரைந்தனா்.
குறுகலான மற்றும் நெரிசலான தெருக்கள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் கட்டடத்தை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல் துறையினா் அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்பு மற்றும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அருகிலுள்ள மாடிகள் மற்றும் பக்கத்து வீடுகளில் இருந்து தண்ணீா் கொண்டு வரப்பட்டு, தீயை கட்டுப்படுத்தவும் அருகிலுள்ள கட்டடங்களுக்கு தீ பரவுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிக புகை மற்றும் கொழுந்துவிட்டு எரிந்த தீக்கு மத்தியில் காவல் துறையினா் கட்டடத்துக்குள் சென்று மூன்றாவது தளத்தில் சிக்கியிருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டனா். தொடா்ந்து, காவல் துறையினரே தீயையும் கட்டுப்படுத்தினா். தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் சேதமடைந்த நிலையில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.