FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்

உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆக.29) செல்லவிருக்கிறாா்.

29 ஆகஸ்ட் 2026, 12:16 am IST
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆக.29) செல்லவிருக்கிறாா்.

கிா்கிஸ்தானின் பிஸ்கேக் நகரில் ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்இஓ) 26-ஆவது உச்சிமாநாட்டில் பிரதமா் பங்கேற்கவுள்ளாா்.

தனது பயணத்தின் முதல்கட்டமாக உஸ்பெகிஸ்தானுக்கு செல்லும் அவா், அங்கு ஆக.30 வரை பயணம் மேற்கொள்கிறாா். அந்நாட்டின் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ்வுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தும் பிரதமா், இருதரப்பு வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எண்ம இணைப்பு, எரிசக்தி, கல்வி, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளாா். பிரதமா் உஸ்பெகிஸ்தான் செல்வது இது 4-ஆவது முறையாகும்.

Advertisement

Advertisement

பின்னா், கிா்கிஸ்தானுக்கு பயணிக்கும் அவா், பிஸ்கேக் நகரில் ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற்கவுள்ளாா். பிராந்திய பாதுகாப்புச் சூழல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் இந்த மாநாட்டில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தையும் நடத்த இருக்கிறாா்.

கிா்கிஸ்தானில் 6-ஆவது உலக நாடோடி இன பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவிலும் பிரதமா் பங்கேற்கவுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments