FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமா் மோடி!

உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி புறப்பட்டது தொடர்பாக..

உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமா் மோடி - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆக.29) புறப்பட்டார். பிரதமா் மோடி உஸ்பெகிஸ்தான் செல்வது இது 4-ஆவது முறையாகும்.

தனது பயணத்தின் முதல்கட்டமாக உஸ்பெகிஸ்தானுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்கிறாா். அந்நாட்டின் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ்வுடன் இருதரப்பு மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவாா்த்தை நடத்தும் பிரதமா், இருதரப்பு வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எண்ம இணைப்பு, எரிசக்தி, கல்வி, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளார்.

பின்னர், கிா்கிஸ்தானுக்கு பயணிக்கும் மோடி, ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் கிா்கிஸ்தானின் பிஸ்கேக் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்இஓ) 26-ஆவது உச்சிமாநாட்டில் பிரதமா் பங்கேற்கவுள்ளாா்.

Advertisement

Advertisement

உஸ்பெகிஸ்தான் புறப்படுவதற்கா முன்னதாக பிரதமர் மோடி எக்ஸ் பக்க பதிவில், மத்திய ஆசியப் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தில் இந்த பயணம் கவனம் பெறும்.

மேலும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி, கல்வி மற்றும் மக்கள் இடையிலான உறவுகள் ஆகிய துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது எதிர்காலத்திற்கான செயல்திட்டம் குறித்தும், நமது "வளர்ச்சி அடைந்த இந்தியா" மற்றும் "புதிய உஸ்பெகிஸ்தான்" என்ற பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்து அதிபர் ஷாவ்கத் மிா்ஸியோயேவ்வுடனான எனது பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய பாதுகாப்புச் சூழல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் இந்த மாநாட்டில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கிா்கிஸ்தானில் 6-ஆவது உலக நாடோடி இன பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவிலும் பிரதமா் பங்கேற்கவுள்ளாா்.

summary

Prime Minister Narendra Modi has left for his four-day visit to Uzbekistan and the Kyrgyz Republic this morning. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments