FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளத்தில் 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியர்!

நேபாள பெருவெள்ளத்தில் ஆசிரியர் ஒருவர் தனது சாதுர்யமான நடவடிக்கையால் 1,643 பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

பள்ளி / ராஜேந்திர தவாடி - எக்ஸ்
பகிர்:

நேபாளத்தில் நேர்ந்த பெருவெள்ளத்தில் ஆசிரியர் ஒருவர் தனது துரிதமான நடவடிக்கையால் 1,643 பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் பலரும் ஆசிரியரின் செயலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

பள்ளியில் இருக்கும்போது மாணவர்களின் பாதுகாப்புக்கு தானே முழு பொறுப்பு என்பதை உணர்ந்து வெள்ளத்தின் கோரத்தன்மையை உணர்ந்து விரைந்து செயல்பட்டதாக ஆசிரியர் கூறுகிறார்.

நேபாளத்தில் திரிசூலி பள்ளத்தாக்கில் திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் இருப்பவர் ராஜேந்திர தவாடி. வயது 47.

Advertisement

Advertisement

வெள்ளம் ஏற்பட்ட புதன்கிழமை காலை சுமார் 9.20 மணியளவில் ஆசிரியர் தவாடிக்கு அவரின் நண்பரிடம் இருந்து வெள்ளத்தின் கோரத்தன்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டி, களிமண், கலந்த வெள்ளநீர், மிகுந்த ஆக்ரோஷமாக நீர்வழித்தடத்தை உடைத்துக்கொண்டு வருவதாகவும் இதில் கட்டடங்கள், பாலங்கள், மின்நிலையங்கள் அடித்துச்செல்லப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நொடியையும் வீணாக்காமல் சாதுர்யமாக செயல்பட்ட தவாடி, பதற்றம் அடையாமல் மாணவர்களுக்கான பாதுகாப்பான இடம் குறித்து யோசித்துள்ளார். அருகில் உள்ள மற்ற இடங்களைக் காட்டிலும் பள்ளிக் கட்டடம் பாதுகாப்பானது என்பதை உணர்ந்தார்.

பள்ளியின் எச்சரிக்கை மணியை உடனடியாக அழுத்தி, மாணவர்களை பதட்டமடையச் செய்யாமல் பள்ளிக் கட்டடத்திற்கு மேலே அனைவரையும் அழைத்துச் செல்ல சக ஆசிரியர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

ஏனெனில் அந்த மூன்று மாடி கான்கிரீட் கட்டடம் ஆற்றிலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில், கிராமத்தை கிழக்குக் கரையுடன் இணைக்கும் இரும்புப் பாலத்தின் அதே மட்டத்தில் அமைந்திருந்தது.

ஆசிரியரின் இத்தகைய உடனடி செயலால் 1,643 பள்ளி மாணவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனினும் சமூகவியல் ஆசிரியர் உயிரிழந்தார். பள்ளியின் மற்றொரு ஆசிரியர் கதவுகளைப் பூட்டிவிட்டுத் திரும்பும் போதுவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.

பள்ளிக்கு மாணவர்களை அனுப்பிவிட்ட பெற்றோர்கள் பரிதவிப்பில் இருக்கையில், சுயநலமாகச் செயல்படாமல் மாணவர்களின் உயிரைக் காக்கும் வகையில் செயல்பட்ட ஆசிரியர் தவாடியை உள்ளூர் மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

மலை மீது இருந்த பனிக்கட்டி ஏரி உடைந்ததால் நேர்ந்த நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி இதுவரை நேபாளத்தில் 750 பேரும் திபெத்தில் 16 பேரும் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

summary

How a Nepali teacher's quick thinking saved 1,643 children from monster floods

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments