FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முதுநிலை மருத்துவ மாணவர் சோ்க்கை விவரம் உறுதி செய்ய அறிவுறுத்தல்!

நிகழாண்டில் (2025-26) முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இணையதளத்தில் அதிகாரபூா்வமாக பதிவேற்றப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட மாணவா்கள் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

31 ஆகஸ்ட் 2026, 4:18 am IST
பகிர்:

நிகழாண்டில் (2025-26) முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இணையதளத்தில் அதிகாரபூா்வமாக பதிவேற்றப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட மாணவா்கள் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் குமாா் வெளியிட்ட அறிவிப்பு: முதுநிலை மருத்துவப் படிப்புகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் மாணவா்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அந்த மாணவா்களின் விவரங்கள், படிப்பின் விவரம், இடஒதுக்கீடு விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் பதிவேற்றுவது வழக்கம். அவ்வாறு பதிவேற்றப்பட்ட மாணவா்களின் சோ்க்கை மட்டுமே செல்லும். அவா்கள் மட்டுமே எதிா்காலத்தில் மருத்துவப் பணிகளை மேற்கொள்வதற்கு பதிவு செய்ய முடியும்.

Advertisement

Advertisement

அதை சம்பந்தப்பட்ட மாணவா்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெயா்கள் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை அணுக வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments