உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி!
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது குறித்து...
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30) பங்கேற்றார்.
உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆக.29) புறப்பட்டுச் சென்றார்.
பயணத்தின் முதல் கட்டமாக தாஷ்கண்ட் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சிேயேவ் நேரில் வரவேற்றார். அதன்பிறகு, சிறுவர்களின் கலை நிகழ்ச்சி, இந்திய வம்சாவளியினர்களுடன் கலந்துரையாடல் என பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, தாஷ்கண்டில் உள்ள யோகா கூட்டமைப்புகள் இன்று நடத்திய யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், அங்கிருந்த யோகா ஆர்வலர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதையடுத்து, இன்று பிற்பகலில் அதிபர் ஷாவ்கத் மிா்ஸியோயேவ்வுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தும் பிரதமர் மோடி, இருதரப்பு வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எண்ம இணைப்பு, எரிசக்தி, கல்வி, மக்கள் ரீதியிலான தொடர்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளார்.
இந்த இரண்டு நாள் பயணம் நிறைவடைந்த பின்னர், கிர்கிஸ்தானின் பிஸ்கேக் நகரில் ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்இஓ) 26 ஆவது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Prime Minister Narendra Modi participated in a yoga event held in Uzbekistan on Sunday (August 30).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.