FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரயாக்ராஜில் சிவப்பு எச்சரிக்கை! தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீரால் மக்கள் அவதி!

கனமழையை தொடர்ந்து பிரயாக்ராஜில் புகுந்த வெள்ள நீர் பற்றி...

பிரயாக்ராஜ் - X
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் மழையால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், பிரயாக்ராஜில் ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் ஆற்றுப்படுகைப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சோட்டா பாகடா மற்றும் ராஜபூர் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களின் கூற்றுப்படி,

Advertisement

Advertisement

தாழ்வான பகுதியில் நீர் தேங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியேறுவது கடினமாகியுள்ளது. பள்ளிகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயிரினங்கள் வீட்டிற்குள் நுழையக்கூடும் என்ற அச்சமும் எழுந்ததுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,

கடந்த இரண்டு நாள்களாக கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பாகடா மற்றும் ராஜபூர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் செயல்படத் தொடங்கப்பட்டுள்ளன. நிவாரண முகாமிற்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அங்குச் செல்லலாம். நீர்மட்டம் உயர்ந்தாலும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இதுவரை பாதிக்கப்படவில்லை.

நிர்வாகம் கிராமப்புறங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Floodwaters from the rising Ganga and Yamuna have entered low-lying areas along their banks in Prayagraj following continuous rainfall, creating difficulties for thousands of people living in the floodplain, officials said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments