FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளத்துக்கு இடையே கவனம் ஈர்த்த பச்சை நிற வீடு!

நேபாள வெள்ளத்துக்கு இடையே கவனம் ஈர்த்த பச்சை நிற வீடு பற்றி.

பச்சை நிற வீடு - ANI
பகிர்:

ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தையே புரட்டிப்போட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியிருக்கிறது. காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 4000ம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் பெரும்பகுதியே வெள்ளத்தால் புரட்டிப்போடப்பட்டிருக்கும் நிலையில், ஒரே ஒரு பச்சை நிற வீடு மட்டும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த குடியிருப்புகளை கட்டுக்கடங்காத ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற போது, பச்சை நிற வீடு மட்டும் அனைத்துக்கும் சாட்சியாக நின்றி கொண்டிருந்தது.

Advertisement

Advertisement

வெள்ளம் வந்தபோது, அதில் ஒரு குடும்பம் சிக்கித் தவித்தது. முதலில் பார்த்தபோது, அவர்களும் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டுவிடுவார்களே என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், அந்த வீடு சற்றும் அசைவில்லாமல் அனைத்தையும் தாங்கிக் கண்டு இருந்தபடியே இருந்தது.

வீட்டில் முதல் தளம் வரை ஆற்றின் வெள்ளம் அடித்தபோதும், அந்த பச்சை வீட்டுக்கு எதுவும் நேரவில்லை. இதனைப் பார்த்தவர்கள் அப்படி என்னதான், எப்படித்தான் வீட்டைக் கட்டியிருப்பார்கள் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள்.

தற்போது வெளியாகும் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள், அடடா, சற்றிலும் கட்டடங்கள் எல்லாம் சகதியாக மாறியிருக்கும்போது, ஒரே ஒரு வீடு மட்டும் தனித்து நின்று தான் ஒரே ஒரு சாட்சி என்பது போல காணப்படுகிறதே என்று சொல்லி வருகிறார்கள்.

மற்ற வீடுகளைப் போல அல்லாமல் சிலர், இந்த வீடு கான்கிரீட் கலவையால் அடித்தளம் போடப்பட்டு அதிக மண் கொட்டி உயரம் அதிகரிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கலாம் என்றும் பகிரப்பட்டு வருகிறது. தற்போது கல்லூரிகள், கட்டுமான நிறுவனங்கள் பலவும் இந்த வீடு குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கவும் தயாராகி வருகின்றனவாம்.

summary

Green house draws attention amidst Nepal floods

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments