FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிறையைவிட்டு கைதிகள் வெளியே செல்லலாம்! மாலைக்குள் திரும்பிவிட வேண்டும்! எங்கே? எதற்காக?

ஜார்க்கண்டில் சிறை விதிமுறைகளில் புதிய சீர்திருத்தம் மேற்கொள்ளவிருப்பது பற்றி...

18 வினாடிகள் முன்பு
கைதிகள் - கோப்புப்படம்
பகிர்:

ஜார்க்கண்டில் சிறை விதிமுறைகளில் புதிய சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறையின் கீழ், நன்னடத்தை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகள் வேலைக்காகச் சிறையிலிருந்து நாள்தோறும் வெளியில் சென்று, மாலைக்குள் திரும்ப அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது.

கைதிகள் வேலைவாய்ப்பைப் பெறவும், குடும்பத்துக்காக நிதி ரீதியாக உதவவும், விடுதலைக்குப் பிறகு அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் வாழ்க்கைக்குத் தயாராகவும் உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள கைதிகள் காலை 6 அல்லது 7 மணிக்கே சிறை வளாகத்திற்கு வெளியே வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் 12 மணி நேரத்திற்குள், அதாவது மாலைக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டும்.

மேலும், இத்திட்டம் அனைத்துக் கைதிகளுக்கும் பொருந்தாது. சிறைக்குள் நன்னடத்தை மற்றும் குற்றமற்ற பதிவைக் கொண்ட கைதிகள் மட்டுமே இதற்காகப் பரிசீலிக்கப்படுவார்கள். இதற்காக தகுதிகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை சிறை நிர்வாகம் வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியே வேலைக்காக செல்லும் கைதிகள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முன்னெடுப்புக்காக ‘ஜார்க்கண்ட் சிறை மற்றும் சீர்திருத்தச் சேவைகள் சட்டம், 2025'-ன் கீழ் சட்டப்பூர்வ அங்கீகாரம் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளது.

இதற்காக விதிமுறைகளில் சீர்திருத்தம் மேற்கொண்டு, நிலையான செயல்பாட்டு நடைமுறையை வகுத்த பிறகு திட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Prisoners may leave the prison! They must return by evening! Where to? For what purpose?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments