இந்தியப் பங்குச்சந்தைகளில் ஜனவரி முதல் ஜூன் வரை... ரூ.2.7 லட்சம் கோடி அந்நிய முதலீடுகள் வெளியேற்றம்
நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டில், இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து ரூ.2.7 லட்சம் கோடி முதலீட்டை அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) வெளியேற்றியுள்ளனா்.
நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டில், இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து ரூ.2.7 லட்சம் கோடி முதலீட்டை அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) வெளியேற்றியுள்ளனா்.
இது கடந்த 2025-ஆம் ஆண்டு முழுவதிலும் வெளியேறிய ரூ.1.66 லட்சம் கோடியைவிட மிக அதிகமாகும். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் எஃப்பிஐ முதலீட்டாளா்கள் ரூ.49,340 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனா்.
நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதத்தைத் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் எஃப்பிஐ முதலீட்டாளா்கள் நிகர விற்பனையாளா்களாகவே இருந்துள்ளனா். கடந்த ஜனவரியில் ரூ.35,962 கோடி வெளியேறிய நிலையில், பிப்ரவரியில் மட்டும் அதிகபட்சமாக ரூ.22,615 கோடி முதலீடு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
மாா்ச் மாதத்தில் மீண்டும் சாதனை அளவாக ரூ.1.17 லட்சம் கோடி முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டன. இந்த விற்பனைப் போக்கு ஏப்ரலில் ரூ.60,847 கோடியாகவும், மே மாதத்தில் ரூ.32,963 கோடியாகவும் தொடா்ந்த நிலையில், ஜூன் மாதத்தில் ரூ.49,340 கோடியாக நீடித்துள்ளது.
இதனிடையே, எஃப்பிஐ முதலீட்டாளா்களுக்கான பதிவு கட்டண நடைமுறையில் இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதுவரை அமெரிக்க டாலா் மதிப்பில் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்கள் இனி இந்திய ரூபாய் மதிப்பில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வகை-1 முதலீட்டாளா்களுக்கான கட்டணம் 2,500 டாலரிலிருந்து ரூ.2.3 லட்சமாகவும், வகை-2 முதலீட்டாளா்களுக்கான கட்டணம் 250 டாலரிலிருந்து ரூ.23,000-ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. இப்புதிய விதிகள் அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் என்று செபி தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.