எஸ்ஐஆர் பணிகளுக்கு கர்நாடக அரசு முழு ஆதரவு அளிக்கும்! - முதல்வர் சிவகுமார் உறுதி!
கர்நாடகத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணிகளுக்கு மாநில அரசு முழு ஆதரவளிக்கும் என முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதி...
கர்நாடகத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு மாநில அரசு முழு ஆதரவளிக்கும் என முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகக் குற்றஞ்சாட்டி ஏராளமான எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடக மாநிலத்தில் தற்போது எஸ்ஐஆர் பணிகள் தொடங்கியுள்ளன. வரும் 2028 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அரசியலாக்க வேண்டாமெனவும், இந்தப் பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசு முழு ஆதரவளிக்கும் எனவும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று (ஜூலை 9) தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“யாருடைய வாக்குரிமைகள் பாதுகாக்கப்படுகிறதோ அவர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெறுவார்கள். வாக்குரிமை இல்லதவர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியாது. எனவே, ஒவ்வொரு வார்டு மற்றும் பகுதிகளில் இதற்கான உதவி மையங்களை நாங்கள் திறந்துள்ளோம். அதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்.
எஸ்ஐஆர் நடவடிக்கைகளை நாம் அரசியலாக்கக் கூடாது. தேர்தல் ஆணையத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள எங்கள் அரசு தயாராக உள்ளது. தகுதியுடைய ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், தேவையான இடங்களில் அரசு அனைத்துத் தேவையான ஆவணங்களையும் வழங்கும்” எனக் கூறியுள்ளார்.
CM D.K. Shivakumar has assured that the state government will extend full support to the SIRin Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.