சுற்றுச்சூழல் செயற்பாட்டில் இந்தியாவுக்கு 176-வது இடம்! கடைசிக்கு முந்தையது!
உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்பாட்டில் இந்தியாவின் நிலை குறித்து...
2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா கடைசிக்கு முந்தைய இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, 176 வது இடத்தைப் பிடித்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைப்பு, சுற்றுச்சூழல் ஆரோக்கியம், பருவநிலை மாற்றத்தை தணித்தல் உள்ளிட்ட குறியீடுகளை மதிப்பீடு செய்து உலக அளவிலான சுற்றுச்சூழல் செயல் திறன் மதிப்பெண் வெளியிடப்படுகிறது.
இதில், 100க்கு 22.46 மதிப்பெண்களை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாடு கொண்ட நாடாக முதல் இடத்தில் உள்ள எஸ்டோனியா 100க்கு 74.49 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
ஆசியா கண்டத்தில் உள்ள 8 நாடுகளுடன் ஒப்பிடும்போதுகூட, இந்தியா கடைசி இடத்திலேயே உள்ளது. அதாவது 8வது இடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டு 180 நாடுகளிடையே நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்கான ஆய்வில் 176 வது இடத்தில் இந்தியா இருந்தது. 2022 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் 180வது இடத்தில் இருந்தது. அதாவது கடைசி இடத்தில் இருந்தது.
இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்கான மதிப்பீடுகள் அறிவியலுக்குப் புறம்பான முறையில் மதிப்பிடப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தது.
ஏல் பல்கலைக் கழகம் மற்றும் கொலம்பியா இணைந்து உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு தரவரிசைப் பட்டியலை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறது.
ஒவ்வொரு நாட்டின் செயற்கைக் கோள் புகைப்படங்கள், பிரச்னைகள் போன்றவற்றை தொகுத்து சுற்றுச்சூழல் செயல்பாடுகள் கணக்கிடப்படுகின்றன.
177 நாடுகளில் 47 சுற்றுச்சூழல் குறியீடுகாளைக் கொண்டு 12 பிரச்னைகளை மையப்படுத்தி 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டன. மொத்த மதிப்பெண்ணில் 25% சுற்றுச்சூழல் சுகாதாரம், 45% சூழல்தொகுதித் திறன் மற்றும் 30% பருவநிலை மாற்றம் எடுத்துக்கொள்ளப்பட்டு 100% சுற்றூச்சூழல் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.
Latest Environment Performance Index India Ranks Second From Lowest 176th Position
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.