ராமர் கோயில் நிதி முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு மீது அரசு பதில் அளிக்க உத்தரவு!
உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாராணைக் குழு, அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இத்துடன் இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாராணைக் குழு, விசாரணை நிலை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயிலை நிர்வகித்து வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்து, மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரணை நடத்தவும், தலைமை கணக்குத் தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்யவும் கோரி, நரேந்திர குமார் கோஸ்வாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதுமட்டுமின்றி சிபிஐ விசாரணைக்கோரி மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை இன்று (ஜூலை 13) விசாரித்தது.
மனுவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ராமர் கோயில் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதுமட்டுமின்றி உத்தரப் பிரதேச அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் தற்போதைய விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது தொடர்பான நிலை அறிக்கை முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
Ayodhya Ram Mandir Donation Theft row Supreme Court Issues Notice To Union, UP Temple Trust On Pleas Seeking CBI Probe
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.