மோசடி, மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கு: முன்னாள் திரிணமூல் எம்.எல்.ஏ. மகன் கைது!
மோசடி, மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் முன்னாள் திரிணமூல் எம்.எல்.ஏ. மகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக..
மோசடி, மிரட்டிப் பணம் பறித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் முன்னாள் திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நிர்மல் கோஷின் மகன் தீர்த்தங்கர் கோஷ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
பனிஹாட்டி நகராட்சி முன்னாள் கவுன்சிலரான தீர்த்தங்கர், தக்ஷினேஸ்வர் பகுதியில் வைத்துப் பிடிக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மிரட்டிப் பணம் பறித்தல், மோசடி, உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் வெற்றி பெற்ற லாட்டரிச் சீட்டுகளை பறித்தல் தொடர்பான புகார்களின் பேரில் போலீஸார் அவரைப் பல நாள்களாகத் தேடி வந்தனர்.
Advertisement
Advertisement
பாரக்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தீர்த்தங்கர் மீது முட்டைகள் வீசப்பட்டன. மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ நிர்மல் கோஷையும் போலீஸார் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11 அன்று ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி திரிணமூல் காங்கிரஸ் பிரிவின் கூட்டத்தில் அவர் காணப்பட்டார். போலீஸாரின் பிடியில் சிக்காமல் அவர் தப்பித்துள்ளார். இருப்பினும், தீர்த்தங்கர் கோஷை எந்தக் கூட்டத்திற்கும் தான் அழைக்கவில்லை என்று கூறி பானர்ஜி அவருடனான தொடர்பை மறுத்தார்.
Former Trinamool Congress MLA Nirmal Ghosh's son Tirthankar Ghosh was arrested from West Bengal's North 24 Parganas district on Monday for allegedly being involved in cheating and extortion activities.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.