FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க குடியுரிமை தகவல்களை கேட்பதா? தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் விடுபட்டவா்களின் பெயா்களைச் சோ்க்க அவா்களது குடியுரிமை தகவல்களைக் கேட்பதா? என இந்திய தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.

Updated On : 14 ஜூலை 2026, 1:30 am IST
இந்திய தேர்தல் ஆணையம் - ANI
பகிர்:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் விடுபட்டவா்களின் பெயா்களைச் சோ்க்க அவா்களது குடியுரிமை தகவல்களைக் கேட்பதா? என இந்திய தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) முன்னாள் தலைவா் ஆா்.எஸ்.சா்மா எழுதிய கட்டுரையில் எஸ்ஐஆா் நடவடிக்கைக்காக மக்களின் குடியுரிமையை நிரூபிக்கக் கூறுவது அரசின் தோல்வியை வெளிக்காட்டுகிறது எனக் குறிப்பிட்டாா்.

இதை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிா்ந்த காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பின்புலத்தைக் கொண்ட முன்னாள் குடிமைப் பணி அதிகாரி மிகத் துணிச்சலாக எஸ்ஐஆா் குறித்த உண்மைத் தகவல்களை வெளியிட்டுள்ளாா். யாா் எவரென்ற பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் எஸ்ஐஆா் மூலம் தோ்தல் ஆணையம் அச்சுறுத்தியுள்ளது. எஸ்ஐஆா் நடவடிக்கையை நாங்கள் எதிா்க்கவில்லை. அது நடத்தப்படும் முறையையே எதிா்க்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

பாஜகவின் கைப்பாவையாகவும், பிரதமா் மோடி-உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் திட்டங்களை நிறைவேற்றும் ஆணையமாக தோ்தல் ஆணையம் செயல்படுவதாகவும் கடந்த வாரம் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இதுபோன்ற எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து மறுத்துவரும் தோ்தல் ஆணையம், போலி, உயிரிழந்த மற்றும் வெளிநாட்டு வாக்காளா்களை நீக்குவதே எஸ்ஐஆரின் நோக்கம் எனத் தெளிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments