FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவா

வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு லாவா நிறுவனம் நிவாரணம் அறிவித்துள்ளது பற்றி...

Updated On : 14 ஜூலை 2026, 6:37 pm IST
வியத்நாம் படகு விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம். - படம் - தினமணி
பகிர்:

வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணத் தொகையை லாவா நிறுவனம் அறிவித்துள்ளது.

தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலாத் தளமான, பு குவாக் தீவு அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 படகு ஊழியர்களும் இருந்தனர்.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி பகல் 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் பலியாகினர். பலியானோரில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

Advertisement

Advertisement

சுற்றுலா சென்றவர்களில் பலரும் சிறந்த வணிக செயல்பாட்டுக்காக லாவா மொபைல் நிறுவனத்தின் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து லாவா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வியத்நாம் படகு விபத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளால் லாவா நிறுவனம் ஆழ்ந்த வருத்தம் அடைகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆறுதல் தெரிவிக்கும் விதமாக பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். முறையான ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு பலியானோர் குடும்பத்தினருக்கு நேரடியாக இந்த நிவாரணத் தொகை சென்றடையும். இந்த உதவி மனிதாபிமான அடிப்படையில் தன்னார்வத்துடன் வழங்கப்படுகிறது.

பலியானவர்கள் லாவா நிறுவனத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் கடுமையான சூழலில் பலியானோர் குடும்பங்களுடன் துணை நிற்பதுடன் அவர்களுக்கான ஆதரவையும் வழங்குகிறோம் என்று லாவா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

summary

Lava has announced a relief amount of Rs 25 lakh for the families of those who lost their lives in the Vietnam boat accident.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments