மோடி அரசின் கொள்கைகளால் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது: காங்கிரஸ்
மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளால் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது பற்றி காங்கிரஸ் கூறுவது..
பிரதமர் மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்ளைகளால் நாடு படிப்படியாகப் பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்வதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது,
அதிகரித்துவரும் பணவீக்கம் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும், பொருளாதார தோல்விக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.
Advertisement
Advertisement
மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளால் நாடு படிப்படியாகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சி இது குறித்து அரசைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
கடந்த 44 மாதங்களில் இல்லாத அளவிலான மொத்த விற்பனை விலை பணவீக்கம் (9.87) மற்றும் எரிபொருள், மின்சார விலைகளில் 27.4% உயர்வு அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது. விவசாயம் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளன.
பொதுமக்கள் பணவீக்கம் மற்றும் வேலையின்மையின் சுமையால் தவித்துவரும் நிலையில்,
உணவு வழங்கும் விவசாயிகளோ அரசின் தவறான கொள்கைகள் மற்றும் மோசமான வானிலை ஆகிய இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
முக்கியப் பொருளாதாரக் குறியீடுகள் அனைத்தும் 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், நிலைமையைச் சரிசெய்வதற்குப் பதிலாக, பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் செய்திகளில் இடம்பிடிப்பதிலேயே மோடி அரசு மும்முரமாக உள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, ஆபத்தான நிலையில் உள்ள பணவீக்க புள்ளிவிவரங்களை மறைக்கவே அரசு முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.