முகப்பு
இந்தியா

இன்றைய பிரச்னையை தீர்க்க நாளைய நெருக்கடியை உருவாக்க வேண்டாம்: காங்கிரஸ்

தில்லியில் அமல்படுத்த உள்ள மின்வாகனக் கொள்கை குறித்து காங்கிரஸ் தெரிவித்த கருத்து.

Updated On : 29 ஜூன் 2026, 7:50 pm IST
காங்கிரஸ் கொடியுடன் தொண்டர்கள் - கோப்புப் படம்
பகிர்:

இன்றைய பிரச்னையை தீர்க்க நாளைய நெருக்கடியை உருவாக்க வேண்டாம் என்று தில்லி மின்சார வாகனக் கொள்கை குறித்து காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் திங்கள்கிழமை (ஜூன் 29) தெரிவித்தார்.

தில்லியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மின் வாகனக் கொள்கைக்கு தில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் புதிய மின் வாகனக் கொள்கை வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சந்தீப் தீட்சித் பேசியதாவது:

தில்லியின் மாசுபாடு பிரச்னை மிகவும் சிக்கலானது. மின்சார வாகனங்களைப் பொறுத்தவரையிலும், அவற்றில் உள்ள பேட்டரிகளை அப்புறப்படுத்துவது என்னவாகும் என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.

இந்த மாசுபாட்டையும் அரசுதான் தீர்க்க வேண்டும். இன்றைய பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிக்கும்போது, நாளைய நெருக்கடியை உருவாக்க வேண்டாம்.

இந்தக் கொள்கையின் பலனை மக்கள் பெறுவதையும், அவர்கள் மீது சுமை ஏற்படாமல் இருப்பதையும் முதல்வரும் அமைச்சரவையும் உறுதி செய்ய வேண்டும் என்று சந்தீப் தீட்சித் குறிப்பிட்டுள்ளார்.

summary

Congress leader Sandeep Dikshit stated on Monday (June 29) regarding Delhi's electric vehicle policy that one should not create tomorrow's crisis while trying to solve today's problem.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments