பிகார் இடைத்தேர்தல்! மூத்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்ததால் பிரசாந்த் கிஷோருக்குப் பின்னடைவு!
பிகாரில் ஜன் சுராஜ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தது குறித்து...
பிகார் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடவுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
பிகாரில், பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் மாநிலங்களவைக்குத் தேர்வானதால் அவர் போட்டியிட்டு வென்ற பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் ஜூன் 30 ஆம் தேதி பங்கிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்தத் தேர்தலில், முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரசாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த 2025 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் சார்பில் கும்ஹரார் தொகுதியில் போட்டியிட்ட கே.சி. சின்ஹா மற்றும் திகா தொகுதியில் போட்டியிட்ட ரிதேஷ் ரஞ்சன் சிங் ஆகியோர் இன்று (ஜூலை 15) பிகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் சரோகி முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாஜகவில் இணைந்துள்ள இருவரும் அவர்கள் போட்டியிட்ட தொகுதியில் மிகவும் மக்கள் செல்வாக்கு உடையவர்களாக அறியப்படுகிறார்கள். இதனால், பெருமளவில் கவனம் பெற்றுள்ள பங்கிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோருக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, பிகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கிய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Jan Suraaj senior office-bearers of the party have joined the BJP.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.