FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மருத்துவமனையில் சிகிச்சையா? சட்டவிரோத தடுப்புக் காவலா? சோனம் வாங்சுக் மனைவி கேள்வி

சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை சட்டவிரோத தடுப்புக் காவல் என அவரின் மனைவி கூறியுள்ளது குறித்து...

Updated On : 19 ஜூலை 2026, 7:33 pm IST
போராட்டக் களத்தில் சோனம் வாங்சுக் படம் ஏந்திய ஆதரவாளர்கள் / சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி - பிடிஐ
பகிர்:

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையைச் சுற்றிலும் பலத்த காவல் துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதால், இது ஒருவகையில் சட்டவிரோத தடுப்புக் காவல் என அவரின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ விமர்சித்துள்ளார்.

சோனம் வாங்சுக் சிகிச்சைப் பெற்றுவரும் தளத்திலும் பார்வையாளர்கள் நுழைய முடியாத வகையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்க அரசு மறுப்பதால், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி அவரின் மனைவி மனுத்தாக்கல் செய்திருந்ததை சுட்டிக்காட்டி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்பதிவில் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதை 'ஒருவகையில் சட்டவிரோத தடுப்புக் காவல்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கீதாஞ்சலி பதிவிட்டுள்ளதாவது:

''அரசு மருத்துவமனை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சோனம் வாங்சுக் உடலில் பொட்டாசியம் அளவு 2.9 என்ற அளவுக்கு குறைந்துவிட்டதாகவும், இதனால் ஆபத்தான நிலையில் அவரின் உடல்நிலை இருப்பதாகவும் சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனை கூறியது.

பல தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு இரவு 10.30 மணியளவில் அவரின் ரத்த மாதிரிகளை எங்களுக்கு அவர்கள் அளித்தனர். தனியார் கூடத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது அவரின் உடலில் உள்ள பொட்டாசியம் அளவு 3.5 ஆக உள்ளது தெரியவந்துள்ளது. இது சராசரியான அளவு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவரை அரசு மருத்துவமனையிலிருந்து நாங்கள் விரும்பும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற எங்களை அனுமதிக்க வேண்டும்.

எங்கள் தளத்தில் சுமார் 30 காவலர்களும், மருத்துவமனை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காவலர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், எங்கள் நடமாட்டம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மருத்துவச் சிகிச்சை அல்ல; இது ஒருவகையில் சட்டவிரோத தடுப்புக் காவல்.

சோனம் வாங்சுக்கிற்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு அரசு மருத்துவமனையும் அரசாங்கமுமே முழு பொறுப்பு.

எனவே, சோனமின் உடல்நிலை மேலும் மோசமடைவதற்கு முன்பாக அவரை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதி கோரி, நான் உயர்நீதிமன்றத்தை அணுகி இன்று அவசர விசாரணைக்கு விண்ணப்பித்துள்ளேன்.

தங்கள் அன்புக்குரியவர் எங்கு மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது'' என அவர் பதிவிட்டுள்ளார்.

summary

Hospital treatment or illegal preventive detention Sonam Wangchuk's wife Gitanjali J Angmo Cockroach Janata Party

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments