ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: துணை நிலை ஆளுநர், முதல்வரிடம் கேட்டறிந்த அமித் ஷா
ஜம்மு - காஷ்மீர் வெள்ள நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா....
ஜம்மு - காஷ்மீர் வெள்ள நிலவரம் குறித்து துணை நிலை ஆளுநர், முதல்வரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோரியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பல அமைப்புகள் இணைந்த கூட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஜூலை 23 வரை ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மிதமான முதல் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், எல்லை மாவட்டமான ரஜோரியில் சனிக்கிழமை மாலை முதல் இடைவிடாத மழை பெய்தது.
இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் ஆறுகள் மற்றும் ஓடைகள் நிரம்பி வழிந்தன. ஆறுகள் கரைபுரண்டு ஓடியதால் பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பேருந்து நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுளளனர். மாறிவரும் சூழலைக் கண்காணிக்கவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் போலீஸார் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
அதேவேளையில், மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் வெள்ள நிலவரம் குறித்து துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்திற்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள அமித் ஷா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி செய்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
Union Home Minister Amit Shah on Sunday spoke to Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha and Chief Minister Omar Abdullah to take stock of the flood situation in Rajouri district following heavy overnight rainfall, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.