வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!
வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதா குறித்து...
வந்தே மாதரம் பாடலை அவமதித்தாலோ, இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை ,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது.
வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல், நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை அண்மையில் வெளியிட்டது.
குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் இந்தப் பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
Advertisement
Advertisement
அதன்படி, தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்பு நிகழ்விலும், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்விலும் ‘வந்தே மாதரம்’ பாடல் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் ஒலிக்கப்பட்டது. இதற்கு, சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கும் தேசிய கெளரவம் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவை, மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.
முன்னதாக, இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில், மசோதா விரைவில் தாக்கலாகிறது.
இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, வந்தே மாதரம் பாடல் பாடுவதை வேண்டுமென்றே தடுப்பவர் அல்லது இடையூறு விளைவிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
The Central Government is introducing a bill during the Monsoon Session of Parliament that prescribes a three-year prison sentence for disrespecting the 'Vande Mataram' song or acting in a manner that disrupts it.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.