உலகக் கோப்பையைக் கொண்டாடும் வாட்ஸ்ஆப்! ஸ்டேட்டஸை லைக் செய்து பாருங்கள்!
வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை லைக் செய்தால் காத்திருக்கும் ஆச்சரியம்.
பிஃபா வெற்றியைக் கொண்டாடும் வகையில், வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டேட்டஸை லைக் செய்தால் கால்பந்து எமோஜிகள் பறப்பதுபோல உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி தகவல் தொடா்பு செயலியான வாட்ஸ்ஆப்பை, இந்தியாவில் சுமார் 50 கோடி பேர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச் செயலி 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. வாட்ஸ்ஆப் என்பது வெறும் உரையாடல்களுக்கு மட்டுமல்லாமல், அலுவல் சார்ந்த வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, நியூயார்க் நகரில் உள்ள மெட்லைஃப் திடலில் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் நடைபெற்றது. மொத்தம் 48 அணிகளுடன் 104 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பையில் இடம் பெற்றன.
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவும்-முன்னாள் சாம்பியன் லா ரோஜா ஸ்பெயினும் மோதின.
இதில், நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இதைக் கொண்டாடும் விதமாக வாட்ஸ்ஆப் நிறுவனம், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை லைக் செய்பவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், லைக் செய்தவுடன் கால்பந்து எமோஜிகள் பறப்பதுபோல உருவாக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஹார்ட் எமோஜிகள் பறப்பதுபோல இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
To celebrate the FIFA victory, a feature has been added to WhatsApp where a football appears to fly across the screen when you 'like' a status.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.