FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உடைந்த இதயம் நம்பிக்கையால் சரிசெய்யப்பட்டுள்ளது... ஆலியா பட் ஆதரவு!

நடிகை ஆலியா பட் ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து...

Updated On : 23 ஜூலை 2026, 12:36 pm IST
நடிகை ஆலியா பட் - படம்: எக்ஸ் / ஆலியா பட்.
பகிர்:

நடிகை ஆலியா பட் ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது, “உடைந்த இதயம் நம்பிக்கையால் சரிசெய்யப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு ஆதரவு தந்து வருகிறார்கள். சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தில்லி காவல்துறை தாக்குதல் நடத்தியது.

Advertisement

Advertisement

சிறப்பு அதிரடிப் படைக் காவலர்கள் மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், ஆலியா பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாணவர்கள் போராட்டம் குறித்து கூறியுள்ளதாவது:

கடைசி சில நாள்களாக எனது இதயம் உடைந்துவிட்டது... பின்னர் நம்பிக்கையினால் மீண்டும் மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளது.

உறுதியுடன் நிற்கும் ஒவ்வொரு மாணவருக்குப் பின்னேயும் ஒரு கனவு, ஒரு குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் கணக்கற்ற தியாகங்களின் பயணம் உள்ளது. அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வது அவர்களை மட்டுமே அல்ல. அவர்களுக்குப் பிறகு அந்தப் பாதையில் வரும் அனைவருக்குமானது.

அவர்களின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. அவர்களின் மன உறுதி நம் அனைவரையும் நோக்கி நீட்டப்பட்ட ஒரு கண்ணாடி போன்றது; நாளைய நாட்டை வடிவமைத்து அதைப் பெறப்போகும் மக்களின் குரலை நாம் உண்மையாகக் கேட்கிறோமா என்று அது நம்மிடம் கேட்கிறது.

மாணவர்களுக்காக. மாணவர்களே. வருங்காலம் அவர்களுடையது. ஜெய் ஹிந்த் எனக் கூறியுள்ளார்.

தேசிய விருது வென்ற ஆலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆல்பா திரைப்படம் ரூ.96 கோடி வசூலித்தது.

summary

A broken heart mended by hope... Alia Bhatt shows support students protest!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments