அஸ்ஸாமிற்கு உதவுங்கள்... ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ஆலியா பட்!
பாலிவுட் நடிகை ஆலியா பட் அஸ்ஸாம் வெள்ள பாதிப்பு குறித்து கூறியிருப்பதாவது...
பாலிவுட் நடிகை ஆலியா பட் அஸ்ஸாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்கள், பின் தொடர்வர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75-ஆக உயா்ந்துள்ளது.
அஸ்ஸாமில் கடந்த ஜூலை 19 முதல் வெள்ள பாதிப்பு தொடங்கியது. இதனால், சாலைகள் மற்றும் வீடுகளை மழை நீா் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் பாதிப்பில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. முக்கியமாக சிவசாகர், சாரிடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகோன், சோனித்பூர் மற்றும் கம்ரூப் ஆகிய 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 622 கிராமங்கள், 45, 341.98 ஹெக்டர் நிலப்பரப்பு வெள்ளத்தினால் தவித்து வருகிறது.
இந்த நிலையில் நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தற்போது, இந்தியாவின் பல பாகங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் அஸ்ஸாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.
அஸ்ஸாமில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். ஒட்டுமொத்த குடும்பமும் தங்களது வீடுகளை, நிலத்தை, வாழ்வாதாரத்தை இழந்துள்ளது. சிலர் தங்களின் அன்பானவர்களையும் இழந்துள்ளார்கள்.
இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இருப்பினும் நம்மை திகைக்க வைக்கிறது. அஸ்ஸாமிற்கு உடனடி நிவாரணம் தேவை. அவர்கள் அதிலிருந்து மீள நீண்ட காலம் தேவைப்படும். அதற்கு அனைவரும் உதவ வேண்டும்.
அடுத்த சில நாள்களில் நாம் எப்படியெல்லாம் உதவலாம் என்பதை சில அமைப்புகள் மூலம் தெரியப்படுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.
நடிகை ஆலியா பட் கடைசியாக ஆல்பா எனும் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, லவ் அண்ட் வார் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
Alia Bhatt urges to support relief efforts amid Assam floods
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.