FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளத்தில் எஸ்எஃப்ஐ பேரணி! தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டம் கலைப்பு!

கேரளத்தில் பேரணியாக சென்ற எஸ்எஃப்ஐ அமைப்பினர் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்துப் போராட்டத்தைக் கலைத்தது பற்றி...

Updated On : 23 ஜூலை 2026, 2:47 pm IST
கேரளத்தில் பேரணியாக சென்ற எஸ்எஃப்ஐ அமைப்பினர் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி போராட்டத்தைக் கலைத்தபோது. - படம் - பிடிஐ
பகிர்:

தில்லியில் இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து கேரளத்தில் பேரணியாக சென்ற எஸ்எஃப்ஐ அமைப்பினர் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்துப் போராட்டத்தைக் கலைத்துள்ளனர்.

நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) போராடி வருகின்றனர்.

போராட்டக் களமான ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது தில்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் பேரணியைக் களைத்தனர்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் நாட்டிலேயே பரபரப்பான சூழலை ஏற்படுத்திய நிலையில் சிஜேபியினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளைக் கண்டித்தும் மாணவர் அமைப்பினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தில்லியில் இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து கேரள ஆளுநர் இல்லம் நோக்கி பேரணியாகச் சென்ற எஸ்எஃப்ஐ அமைப்பினர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களுடைய போராட்டத்தை காவல்துறையினர் கலைத்துள்ளனர்.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் போராடி வரும் இளைஞர்கள், மாணவர்கள் என ஏராளமானோரைக் காவல்துறையினர் கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Police dispersed a protest by SFI members in Kerala—who were marching to condemn the lathi-charge on youths in Delhi—by using water cannons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments