FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிஜேபி போராட்டம்! போலீஸ் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞருடன் ராகுல் காந்தி!

தில்லியில் காவல் துறையினர் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞருடன் இணைந்து ராகுல் காந்தி பேட்டி...

Updated On : 24 ஜூலை 2026, 3:56 pm IST
தில்லி போலீஸார் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் உடன் ராகுல் காந்தி... - ANI
பகிர்:

தில்லி காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் உடன் இணைந்து ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

தில்லியில், நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 20 முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி சிஜேபி தலைமையில் இளைஞர்கள் நடத்திய பேரணியில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், ஏராளமான இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தில்லி காவல் துறையினரின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரை அழைத்து வந்து அவருடன் இணைந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 24) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

இதுபற்றி, ராகுல் காந்தி பேசியதாவது:

“இங்கு என்னுடன் நிற்கும் என் சகோதரர், அமைதியான முறையில் மூவர்ணக் கொடியுடன் போராட்டம் நடத்தியபோது பெல்லட் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர் என விவரிக்க விரும்புகிறேன். பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என அரசு கூறுகிறது.

இவருடைய கண்கள் பாதிப்படைந்து அவருக்குப் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இவர் காவலர் தகுதித் தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அந்தத் தேர்வின் வினாத்தாளும் கசிந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.

summary

Rahul Gandhi gave an interview alongside the young man who was critically injured in an attack by the Delhi Police.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments