FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

26 ஆண்டுகளாக... கார்கில் போர் தியாகியின் குடும்பத்திற்கு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்!

கார்கில் போரில் பலியான தியாகி அவ்னிஷ் யாதவ் குடும்பத்திற்கு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி...

Updated On : 26 ஜூலை 2026, 5:50 pm IST
- கோப்புப் படம்
பகிர்:

இந்திய ராணுவ வீரர் அவனிஷ் யாதவ் கார்கில் போரில் கொல்லப்பட்டு 26 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவரது தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பலவற்றை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்று அவரது குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் - பீகார் எல்லையில் உள்ள சிதாப்தியாரா, தலெல் டோலா கிராமத்தைச் சேர்ந்த அவனிஷ் யாதவின் குடும்பத்தினர், கார்கில் போரில் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ​செப்டம்பர் 4, 1999 அன்று அவனிஷ் யாதவ் வீரமரணம் அடைந்ததாகத் தெரிவித்தனர்.

27-வது கார்கில் நினைவு நாளான இன்று அவரது தாயார் சோமரோ தேவி பேசுகையில், ”26 ஆண்டுகள் கடந்தும், தனது மகனின் தியாகத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகளில் ஒன்றாக கிராமத்தில் அவனிஷ் யாதவ் சிலை நிறுவப்படும் என்றும், அரசு மருத்துவமனை அல்லது தொடக்கப் பள்ளிக்கு அவரது பெயர் வைக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். அதுவும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

அவ்னிஷ் தனது 18 வயதில் ராணுவத்தில் சேர்ந்து, 20 பாகிஸ்தான் வீரர்களை வீழ்த்தி தனது உயிரை தியாகம் செய்ததாக அவரது தந்தையும், ஓய்வுபெற்ற சி.ஆர்.பி.எஃப் வீரருமான ஷிவ்ஜி யாதவ் கூறினார். மேலும், அவ்னிஷின் மனைவிக்கு மத்திய அரசு ஒரு பெட்ரோல் நிலையத்தை ஒதுக்கியுள்ள நிலையில், குடும்பத்திற்கும் கிராமத்திற்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் எங்களை நலம் விசாரிக்கக் கூட யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பைரியா பகுதியின் துணைப் பிரிவு நீதிபதியாக சஷி மணி நாத் மிஸ்ரா சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். இந்த விவகாரத்தை விசாரித்து வரும் மிஸ்ரா, விவரங்களைச் சரிபார்த்து அரசு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

summary

For 26 years Unfulfilled promises to the family of a Kargil War martyr

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments